திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (08:49 IST)

கார்கில் போர் நினைவகத்தில் மரியாதை செலுத்திய அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமார் தற்போது வட இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பிரபல தமிழ் நடிகரான அஜித்குமார் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வது போன்றவற்றை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். சமீபத்தில் ஐரோப்பா சென்ற அவர் இதுபோல பைக்கில் அந்த கண்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

அதன் பின்னர் அஜித் 61 படத்தில் சில நாட்கள் நடித்த அவர் இப்போது லடாக் லாங் பைக் ரைடு சென்றுள்ளார். இதில் அஜித்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் பைக் ஓட்டி சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் அஜித்குமார், கார்கில் போர் நினைவகத்துக்கு சென்று அங்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.