எச்சரித்த அஜித்குமார்...''விடாமுயற்சி'' பட அப்டேட்
லைகா தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.
இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடக்கும் என கூறப்பட்டது.
அதன்பின்னர், சிலர் காரணங்களால் இன்னும் இப்பட ஷூட்டிங் தொடங்கவில்லை.
இந்த நிலையில், அஜித்குமார் தான் வரும் ஜூன் மாதத்தில் இருந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க செல்லவுள்ளார். இப்படம் வரும் பொங்கல் ரிலீஸுக்கு திட்டமிட்டுள்ளதால் அஜித்குமார் ஜூன் மாதம் முதல் இப்படத்திற்காக பிஸியாகிவிடுவார். அவருக்கு பைக் ரைடிங் செல்வதற்கு கூட நேரமிருக்காது.
இந்த நிலையில், தற்போது நிதி நெருக்கடியால் லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி பட ஷூட்டிங் சில நாள்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், லைகா நிறுவனம் மற்றும் இயக்குனரிடம் ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் தேதி கொடுத்துள்ளாராம். அதன்பிறகு இப்படத்திற்கு நேரம் ஒதுக்கமுடியாது என்று எச்சரித்துள்ளராம்.
அதன்படி, ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இப்பட ஷூட்டிங் தொடங்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.