நடிகர் யோகிபாபுவுக்கு ’தல ‘ அஜித்குமார் அறிவுரை
நடிகர் யோகிபாபுவுக்கு நடிகர் அஜித்குமார் அறிவுரை கூறியுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது.
யோகி படத்தில் நடிகராக அறிமுகம் ஆனவர் பாபு. அதனால் இவர் யோகி பாபு என அழைக்கப்படுகிறது. அரண்மனை, பரியேறும் பெருமாள்,கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான திரைப்படம் மண்டேலா. இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் நாயகியாக ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்து இருந்தார்.
இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்த படம் தேர்தல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ரசிகர்கள் ரசித்தார்கள்.தற்போது விஜய்65 படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் , நடிகர் அஜித் யோகிபாபுவுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து யோகிபாபு கூறியுள்ளதாவது: நான் வீரம், வேதளாம், விஸ்வாசம், மற்றும் தற்போது வலிமை ஆகிய படங்களில் நடிதுள்ளேன். அப்போது ஷூட்டிங் இடைவெளியில் என்னிடம் ஏன் இன்னும் பொண்ணுப் பார்க்கல….ஏன் கல்யாணம் செய்யவில்லை எனக் கேட்டுக்கொண்டே இருப்பார்….
நான் அவருடன், பொண்ணுதான் என்னைப் பார்க்க மாட்டிங்கறாங்க என்றேன்…அதற்கு அவர் விரைவில் உனக்குக் கல்யாணம் ஆகும் என கூறினார். பின்னர் வலிமை படப்பிடிப்பில் என்னைப் பார்த்து, குடும்பம் ரொம்ப முக்கியம் எனக் எனக்கு அறிவுரை கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.