'வலிமை 'படத்தில் அஜித்-ன் உழைப்பு....வியந்த படக்குழு …,புகழும் ரசிகர்கள்
ஹெச்.வினோத் இயக்க்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஹெ. வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் படம் வலிமை . இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்
நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கூறியுள்ளதாவது:
எங்கள் நிறுவனம் கொடுத்த முந்தைய அறிக்கையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித்குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தில் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.
அந்த அறிவிப்பு வரும்போது, கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ அதன் தாக்கம் சுனாமி போலத் தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
பலர் தற்போது பொருளாதரம் இழந்து உற்றார் , உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.
எனவே இந்தச் சூழ்நிலையில் ஜி ஸ்டுடியோஸ் பே
வியூ ப்ரோஜெக்ட்ஸ் இப்படத்தில் உள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின்படி வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் மற்றோரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
நாம் அனைவரும் ஒன்றினைந்து அனைவரின் நலத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரார்திப்போம் எனத் தெரிவித்திருந்தார்.#ValimaiUpdate
இந்நிலையில் இன்னும் வலிமை படத்தின் ஒரு வார ஷூட்டில் பாக்கி இருக்கும் நிலையில், கூடுமானவரை படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிடலாம் என்று படக்குழுவினரை நடிகர் உற்சாகப்படுத்தியுள்ளார்.
இதுவரை ஷூட்டிங் முடித்துள்ள பகுதிகளுக்கான டப்பிங் பணியையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார் அஜித். குறிப்பாக பகலில் ஷூட்டி இருப்பதால் அதிகாலை 3 மணிக்கு டப்பிங் பேச வந்து,. மதியம் வரை பேசுகிறார் என்றும், படக்குழுவ்வினர் அவரது பெருந்தன்மையும் வேலையில் காட்டும் பொறுப்புணர்வையும் பார்த்து வியந்து பாராட்டிவருகின்றனர்.