திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (08:21 IST)

இது என்னய்யா லாஜிக்… ட்ரோலாகும் வலிமை தயாரிப்பாளரின் அறிவிப்பு!

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை முதல் லுக் போஸ்டர் வெளியிடப்படாது என அறிவித்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடிப்பில் ஒரு வருடத்துக்கும் மேலாக உருவாக்கத்தில் இருக்கும் வலிமை படத்தின் ஒரே ஒரு போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடி வரை வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்தனர். இதனால் மனமிறங்கிய அஜித்தும் தயாரிப்பாளரும் மே 1 ஆம் தேதி முதல் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

ஆனால் இப்போது கொரோனா இரண்டாவது அலையைக் காரணம் காட்டி போஸ்டர் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் என்பது இணையத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களால் சமூகவலைதளங்களால் கொண்டாடப்படுவது. இதற்கும் கொரோனாவுக்கும் என்னய்யா சம்மந்தம் என்று பல ரசிகர்களும் ஆதங்கப்படு வருகின்றனர்.