எத்தனை பேர் கூட நடிச்சாலும் அவர் தான் என்னுடைய ஃபேவரைட் - நயன்தாரா
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.
ஹீரோக்களுக்கு இணையாக போட்டிபோட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். இவர் அஜித் , விஜய் , ரஜினி , தனுஷ் , சிம்பு உள்ளிட்ட அனைத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
இந்நிலையில் நயன்தாரா பேட்டி ஒன்றில் தன்னுடைய திரை பயணத்தின் அனுபவங்களை குறித்து பகிர்ந்துகொண்டார். அவரிடம் நீங்கள் நடித்ததிலே உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல் " நான் எத்தனை பெரிய நடிகர்களுடன் நடித்தாலும் அஜித் சார் தான் என்னுடைய ஃபேவரைட் என கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.