வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (14:19 IST)

இட்லி கடைக்காரருக்கு ரூ.1 லட்சம் கொடுத்த அஜித்: டுவிட்டரில் பரவும் தகவல்

சாலையோர இட்லி கடைக்காரர் ஒருவருக்கு அஜித் ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக கொடுத்த தகவல் தற்போது அஜித் ரசிகர்களால் டுவிட்டரில் மிக வேகமாக பரவி வருகிறது
 
தல அஜித் சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றார். அப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே இட்லி கடை ஒன்று இருந்ததாகவும் அங்கு அவர் இட்லியை ரசித்து ருசித்து சாப்பிட்டதாகவும் தெரிகிறது
 
இந்த நிலையில் அந்த இட்லி கடைகாரரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரது குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதாகவும் குழந்தைகளின் படிப்பிற்காக அவர் பணம் சேர்க்க கஷ்டப்பட்டு கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பும் போது இட்லி கடைகாரருக்கு தனது உதவியாளர் மூலம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து விட்டு சென்றதாகவும் அவரது குழந்தைகளை நன்றாக படிக்க தனது வாழ்த்துக்கள் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த தகவலை அஜித் ரசிகர்கள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது