அஜித் பட இசையமைப்பாளர் டுவீட்… விரையில் ஒரு விருந்து !!

yuvanshankar raja
Sinoj| Last Updated: புதன், 13 ஜனவரி 2021 (17:05 IST)

இசையமைபாளர் யுவன்சங்கர் ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் விரைவில் இசை இசைப்பாடம் வெளியிடவுள்ளதாக ஒரு
போஸ்ட்ர் வெளியிட்டுள்ளார்.


அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்திற்கு இதுவரை அப்டேட் வரவில்லை என அஜித் ரசிகர்கள் தினம்தோறும் இயக்குநரிடமும் தயாரிப்பாளர் போனி கபூரிடமும் கேட்டு வருகின்றனர்.

ஆனால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள்
வேகமாக நடைபெற்று வருவதால் இதற்கான அப்டேடுகள் வருவதில் தாமதமாகிறது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பவர்ஸ்டார் பவன்கல்யான் நடிப்பில் உருவாகி வரும் படம் வக்கீல் சாஹிப். இப்படத்தைக் குறித்து தயாரிப்பாளார் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வக்கீல் சாஹீப் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என ஒரு போஸ்டர் வெளியிட்டார்.

இதனால் அஜித் படம் குறித்த அப்டேட் வெளிவராததால் மீண்டும் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்று யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார். அதில், டாப் டக்கர் என்ரு பெயரிடப்பட்டுள்ளது. இதில் யுவங் சங்கர் ராஜாவின் இசைப்பாடல் வெளியாகும்
எனத் தெரிகிறது. மேலும் இதில் அவருடன் உச்சனா அமித், பாட்ஷா,ஜினிதா காந்தி, ரஷிமிகா மந்தனா ஆகியோர் பங்களிப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்போது வலிமை படத்தில் பேக் கிரண்ட் ஸ்கோர் செய்து வரும்ம் யுவன் சங்கர் ராஜா விரையில் அஜித் ரசிகர்களுக்க்கு விருந்து வைக்கவுள்ளார். அத்துடன் அவரது ஆல்பம் பாடலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :