பிங்க் படத்தை ரணகொடூரமாக்கியுள்ள வக்கீல் சாப் – டிரைலரை பார்த்து கடுப்பான ரசிகர்கள்!

Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2021 (11:07 IST)

இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற பிங்க் திரைப்படத்தை இப்போது தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் வெளியான பெண்ணிய திரைப்படங்களில் மிக முக்கியமானது 2016 ஆம் ஆண்டு அமிதாப் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம். இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அந்த திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் கடந்த ஆண்டு ரிமேக் செய்யப்பட்டது. ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் தயாரித்த போனி கபூரே தில் ராஜுவுடன் இணைந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார்.

ஆனால் இந்த படத்தின் கருவை சிதைக்கும் வகையிலேயே இதுவரை படக்குழு வெளியிட்ட போஸ்டர்கள் மற்றும் டிரைலர் எல்லாம் அமைந்துள்ளது. நேற்று இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் படத்தில் பிங்க் ரீமேக் என்று சொல்லும் அளவுக்கு எந்தக் காட்சிகளும் இல்லாமல் வழக்கமான பவன் கல்யாணின் மசாலாப் படம் பில்ட் அப் காட்சிகளும் ஆக்‌ஷன் காட்சிகளும் மட்டுமே இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிங்க் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :