கமலுக்காக இறங்கி வரும் அஜித் – ஒரே மேடையில் தமிழ் சினிமா ஜாம்பவான்கள் !
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு திரைப்பயணத்தை பாராட்டும் விதமாக வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கும் பாராட்டு விழாவில் அஜித் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.
நடிகர் அஜித் சினிமா சம்மந்தப்பட்ட எந்த பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை; அது தன் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளாக இருந்தாலும். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் ஒரு பொதுமேடையில் தோன்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தன் சகநடிகர் விஜய் இருக்கும் அதே மேடையில்.
உலகநாயகன் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அவருக்கு வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் உரிமையாளர் ஐசரி கணேஷ் பாராட்டு விழா ஒன்றை வரும் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்துள்ளார். அதில் தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல் மேல் மரியாதை வைத்திருக்கும் அஜித் அவருக்காக இதில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. அப்படி கலந்துகொண்டால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் விஜய் ஒன்றாக இருக்கும் மேடையாக அது இருக்கும். அதை நினைத்து இருவரின் ரசிகர்களும் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்துள்ளனர்.