வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (12:17 IST)

அஜித் ரூ.100 கோடி, விஜய் ரூ.140 கோடி: போட்டி போட்டு செய்த செலவு!

அஜித் ரூபாய் 100 கோடி செலவு செய்த நிலையில், அதற்கு போட்டியாக விஜய் ரூபாய் 140 கோடி செலவு செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது திருவான்மியூர் வீட்டை இடித்துவிட்டு ரூபாய் 100 கோடி செலவில் பிரம்மாண்டமாக ஒரு பங்களா கட்டி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த பங்களாவிற்கு உள்ளேயே டப்பிங் தியேட்டர் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன 
இந்த நிலையில் விஜய்யும் தான் குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு அதில் ஒரு நவீன பங்களாவைக் கட்டி வருவதாகவும் இந்த பங்களாவின் மதிப்பு ரூ 140 கோடி என்றும் இந்த பங்களாவின் கட்டுமானபணி இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது 
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகிய இருவரும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து பங்களா கட்டி வருவது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சீனியர் நடிகர்களான கமல், ரஜினி ஆகிய இருவரும் இன்னும் கடந்த முப்பது வருடங்களுக்கு முன் இருந்த வீட்டிலேயே உள்ளனர் என்பதும் அவர்கள் தங்களுடைய வீட்டை எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது