திரௌபதி படம் குறித்து அஜித் என்ன சொன்னார்? பரபரப்பு தகவல்
சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தின் டிரைலர் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் குறித்து அஜித் கூறியதாக பரவி வரும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திரௌபதி படத்தில் ஷாலினிஅஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட்ஸ்தான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் குறித்து எந்தவித கருத்துக்களையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்றும் பேட்டி எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் ஷாலினிஅஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட்ஸ்க்கு அஜித் மற்றும் ஷாலினி குடும்பத்தினர் அறிவுரை கூறி இருப்பதாக கூறப்படுகிறது
இந்த படத்தின் அனைத்து காட்சிகளிலும் இயக்குனர் கூறியபடி தான் நடித்து கொடுத்ததாக மட்டும் ஒரு வரியில் கூறிவிட்டு முடித்துவிடவேண்டும் என்றும் அஜித்தும் அவரது தரப்பினர்களும் அறிவுரை கூறப்பட்டதாக தெரிகிறது. அஜித்தின் அறிவுரைப்படியே இதுநாள்வரை ரிச்சர்ட்ஸ் இந்த படம் குறித்து வாயை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது