செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (17:04 IST)

இந்த முறை தாமதம் கூடாது… அஜித் 61 படக்குழு போட்டிருக்கும் திட்டம்!

அஜித் 61 படத்தை எப்படியாவது இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழு உறுதியாக உள்ளதாம்.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.

இந்த படம் வலிமை போல ஆக்‌ஷன் படம் இல்லை என்பதால் குறுகிய காலத்தில் படத்தை முடித்து 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்க்கேற்றார் போல வேலை செய்து வருகிறதாம்.