அஜித் -61 பட முக்கிய அப்டேட்....ரசிகர்கள் மகிழ்ச்சி
அஜித்தின் 61வது படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.
அஜித்தின் 60வது திரைப்படமான வலிமை சமீபத்தில் ரிலீசான நிலையில் அவரது 61வது படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது
இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை அடிக்கும் படம் என்றும் பேராசிரியராக நடிக்கும் அஜித் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடுவது ஏன் என்பதும் அதை காவல்துறையினரால் தடுக்க முடிந்ததா என்பதுதான் இந்த படத்தின் விறுவிறுப்பான கதை என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை மூன்று மாதங்களில் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இ ந் நிலையில் இ ப்படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகிறது.
அதில்,
திரைக்கதை மற்றும் இயக்கம் - ஹெச்.வினோத்
ஒளிப்பதிவு – நிரவ் ஷா
இசை- ஜிப்ரன்
எடிட்டர் – விஜய் வெல்லகுட்டி
ஸ்டண்ட்- சுப்ரீம் சுண்டர், திலீப் சுப்பராயன்
எக்ஸிகியூட்டிவ்- ஜெயராஜ் பிச்சை
சவுண்ட் எபெக்ட்- சிங்க் சினிமாஸ்
விஎஃப் எக்ஸ்- செல்வகுமார்
உதவி இயக்குநர் - சமீர் உல்லா
-ஆகியோர் இப்படத்தின் பணியாற்றவுள்ளனர். சினிமாவில் திறமையானவர்கள் அஜித்61 படத்தின் பணியாற்றுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை அடுத்து தொடர்ச்சியாக 3 வது முறையாக அஜித், போனிகபூர், வினோத் இணைந்துள்ளதாலும் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.