புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (17:14 IST)

அஜித்தின் அடுத்த படம் பிங்க் ரீமேக்தான் – தொடரும் குழப்பங்கள்!!!

நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படததை இயக்கும் இயக்குனர் அந்த படம் ரீமேக் அல்ல என்று செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்னால் வெளியானது. ஆனால் இப்போது மீண்டும் அந்த படம் பிங்க் ரீமேக்தான் என்ற தகவல் பரவி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாவதை அடுத்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களின் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இந்த படத்தினை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்த நாட்களில் இருந்தே படம் பற்றிய பல வதந்திகள் கோலிவுட் காற்றில் கலந்து பரவத் தொடங்கிவிட்டன. அதில் முக்கியமான ஒரு வதந்தி இந்த படம் கடந்த ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் என்பது.

கிட்டத்தட்ட கோலிவுட் முழுவதுமே இந்த தகவலை உண்மை என நம்பியிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னால் இயக்குனர் ஹெச் வினோத். அந்த தக்லவலை மறுத்து தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டார்.

இந்த செய்தி அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரை சமீபத்தில் சென்னையில் சந்தித்ததின் பின் வெளியானதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இப்போது அந்த டிவிட்டை இயக்குனர் வினோத் தான் பகிரவில்லை என்றும். எந்த சமூகவலைதளங்களிலும் தான் செயல்படவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது அடுத்த படம் குறித்து தயாரிப்புத் தரப்பில் இருந்து முறையான அறிவிப்பு வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது அஜித் நடிக்கும் அடுத்த படம் பிங்க் ரீமேக்தான் என்ற தகவல் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.