1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:53 IST)

'தல 60' படத்தின் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் இவர்கள்தான்..!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில்  விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் 2019ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
 
இதையடுத்து அஜித்தின் 60வது படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தன. பிங்க் பட ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாகவும், இதனை வினோத் இயக்க உள்ளதாகவும் தகவல் வந்தன.
 
இந்நிலையில்  அஜித்துக்கு வரலாற்று வெற்றிபடத்தை கொடுத்த விஷ்ணு வர்தன் 'தல 60' படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜேஷ் கொட்டப்பாடி  இந்த படத்தை தயாரிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றியுள்ளார்.
 
இதனிடையே பாலகுமாரன் எழுதிய   ராஜேந்திர சோழன் நாவலை அடிப்படையாக கொண்டு 'தல 60' படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.