கமலுக்கு நோ… அஜித்துக்கு எஸ் ! – தல 60 படத்தில் அஜய்தேவ்கன் ?
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்தப் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அஜித் – ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணி நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளது. நேர்கொண்ட பார்வைக்கு எதிராக கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த அஜித்துக்கு மிகவும் பிடித்த ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதேப்போல இந்தப்படத்தில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்குவதாக இருந்த நிலையில் சிலக் காரணங்களால் தற்போது அடுத்த மாதம் தள்ளிப்போயுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானிடம் தயாரிப்பாளர் போனி கபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்தியன் 2 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அஜய் தேவ்கான் மறுத்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தியதால் நடிக்க முடியவில்லை எனவும் இப்போது போனி கபூருக்காக இந்தப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.