ஐஸ்வர்யா நியாயமாக விளையாடிய ஒரே டாஸ்க்
பிக்பாஸ் வீட்டில் இன்றைய முதல் டாஸ்க்கான டார்ச்சர் டாஸ்க்கில் கைவலியால் தோல்வி அடைந்த ஐஸ்வர்யா, 'ஞாபகம் வருதா' டாஸ்க்கில் அசத்தியதால் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார்.
வரிசையாக சொன்ன வண்ணங்களை சரியாக ஞாபகம் வைத்து, இடையிடையே பாடலுக்கு நடனமும் ஆடி சரியாக விளையாடிய ஐஸ்வர்யா முழு மதிப்பெண்களை பெற்றதால் 230 மதிப்பெண் பெற்றுள்ளார். இவ்வளவிற்கும் அவருக்கு தமிழ் முழுமையாக தெரியாது. மொத்தத்தில் ஐஸ்வர்யா நியாயமாக விளையாடி வெற்றி பெற்ற ஒரே டாஸ்க் இதுதான்
ஆனால் தமிழ் தெரிந்த தமிழ்ப்பெண்களான ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி குறைந்த மதிப்பெண்களையே பெற்றனர்.
யாஷிகா, ஐஸ்வர்யாவை பார்த்து காப்பியடித்து இரண்டாம் இடம் பெற்றார். மொத்தத்தில் ஞாபகம் வருதே டாஸ்க்கை பொருத்தமட்டில் ஐஸ்வர்யா ஹீரோ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு டாஸ்க்குகளின் முடிவில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் 230 புள்ளிகள் பெற்று சம நிலையில் உள்ளனர். விஜயலட்சுமி 120 புள்ளிகளும், ஜனனி 90 புள்ளிகளும் பாலாஜி, ரித்விகா -10 புள்ளிகளூம் பெற்றுள்ளனர்.