காதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் வரும்: யாஷிகா

VM| Last Updated: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (15:23 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில நடிகை யாஷிகா ஆனந்த், மஹத்தை காதலிக்கிறதா சில வாரங்களுக்கு முன்பு சொல்லி இருந்தார். இது பல பிரச்சனைகளுக்கு காரணமாச்சு. 


ஏன்னா மஹத் பிராச்சி என்பவரை ஏற்கனவே காதலிச்சிடு  வந்ததால், பிக்பாஸ் வீட்டுக்குள் மற்றொரு காதல் வந்ததால் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் வறுத்தெடுத்தாங்க.
 
வியாழக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் தன் தோழியின் காதல் கதை பற்றி பேசுனாங்க. மும்தாஜின் தோழி சனா என்பவருக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்து, வேற ஒருத்தரோடு காதல் வந்ததாம், என்ன முடிவெடுப்பது என தெரியாமல் அவர் பெரிய யோசனை செய்து மும்தாஜிடம் கேட்டாராம்.
 
அப்போது நடுவில் பேசிய யாஷிகா "Love is Uncontrollable, It can happen with one or many" என சத்தமாக கத்தினார். அதாவது, காதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் அது வரும் என யாஷிகா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :