ஐஸ்வர்யா ராஜேஷ் -ன் ’சொப்பன சுந்தரி ’பட டிரைலர் ரிலிஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ்சினிமாவில், காக்காமுட்டை, ரம்மி, கனா, கபெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடித்த ரன் பேபி ரன் படம் வெளியானது.
இந்த நிலையில், லாக்கப் படத்தை இயக்கிய எஸ்ஜி சார்லஸ் இயக்கியுள்ள படம் சொப்பன் சுந்தரி. இப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவருடன் இணைந்து, தீபா சங்கர்,கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்,
இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து ஹன்சிகி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் டிரைலரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் பணக்காரி என்ற பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.