ரசிகர்களே எச்சரிக்கை... ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் - ஐஸ்வர்யா ராஜேஷ் அலார்ட்!
டஸ்கி ஸ்கின் அழகியாக நல்ல திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அதுபோன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. இவரின் சோசியல் மீடியா பக்கங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதையடுத்து உடனடியாக தன் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அலார்ட் ஆக கூறியுள்ளார். மேலும் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கை மீட்டு எடுப்பதற்கான வேலைகளை மும்முரமாக நடந்து வருகிறது.