1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (11:04 IST)

ரஜினியின் ‘2.0’ படத்தில் ஐஸ்வர்யா ராய் இல்லை

ரஜினியின் ‘2.0’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவே இல்லை என்கிறார்கள். 
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க, அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்  நடைபெற்று வருகின்றன.
 
ஏற்கெனவே ரிலீஸான ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்தப் படம் உருவாகி வருகிறது என்கிறார்கள். அப்படியானால், முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராயும் இதில் இருக்க வேண்டுமல்லவா? குறைந்தபட்சம் கெஸ்ட் ரோலிலாவது அவர் நடித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால்,  இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவே இல்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது.