திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2025 (11:44 IST)

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இணையும் பிரபல கதாநாயகி…!

விடுதலை படத்தை வெற்றிமாறன் தொடங்கும் முன்பே ‘வாடிவாசல்’ படத்தை சூர்யா மற்றும் தயாரிப்பாளர் தாணுவோடு இணைந்து அறிவித்தார். ஆனால் சிறிய பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை நான்கு ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக் கொண்டதால் இன்னும் ‘வாடிவாசல்’ தொடங்கப்படவில்லை.

தற்போது விடுதலை 2 திரைப்படம் ரிலீஸாகிவிட்டதால் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

‘வாடிவாசல்’ படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.