வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (19:14 IST)

தூள் கிளப்பும் "ஐரா" புதிய ஸ்னீக் பீக் வீடியோ!

வசனமே இல்லாமல் மிரட்டும் நயன்தாராவின் ஐரா பட புதிய ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 

 
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் யமுனா, பவானி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் வருகிற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 
 
இந்நிலையில் சற்றுமுன்  2 நிமிடம் 48 விநாடிகள் கொண்ட புதிய ஸ்னீக் பீக்  வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. 
 
இந்தப் படத்தின் முதல்காட்சி அதிகாலை 5 மணி காட்சி திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.