வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (19:24 IST)

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 26வது பட அறிவிப்பு.. ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் புரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
இந்த படத்தை ’ஓமை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவையும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் பிரதீப் ரங்கநாதன் இந்த படம் குறித்து கூறும் தகவல்கள் உள்ளது. 
 
ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே என்ற படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்தது என்பதும் அந்த படம் வெறும் 5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட நிலையில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் லவ் டுடே போலவே இன்னொரு ஜாக்பாட் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran