வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (14:36 IST)

#அழிவின்விளிம்பில்AGS: மொத்தமாக போட்டு தள்ளிய அட்லி - விஜய் காம்போ!

பிகில் படம் தோல்வி படம் என்றும் இதனால் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதாகவும் கூறி #அழிவின்விளிம்பில்AGS என்ற ஹேஷ் டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் அட்லீ தெறி , மெர்சல் , பிகில் என இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் சமீபத்தில் வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கதைக்களத்தை கொண்டிருந்தது. 
 
ஆம், விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது? யார் யாருக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது? என்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. 
மொத்தத்தில் இந்த படம் லாபகரமான படமா? அல்லது தோல்வியை கொடுத்த படமா? என்ற தகவலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. இந்நிலையில் பிகில் படம் நஷ்டம் என்றும் இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நஷ்டத்தில் உள்ளதாகவும் கூறி #அழிவின்விளிம்பில்AGS என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
அதோடு மெர்சல் படமும் நஷ்டத்தை தான் கொடுத்தது எனவும் அந்த படத்தை தயாரித்த தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஆபிஸையே காலி செய்துவிட்டதாகவும் #வரசொல்ல_ஆப்பிஸ்_இல்லையே என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாக்கப்பட்டது.