1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (15:17 IST)

ரஜினி, கமல், விஜய்... போன்றவர்களை நம்பிச் சென்றால் ஏமாறுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி, கமல், இவர்கள் இருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இருவரும் இன்றுவரை தங்களின் சினிமா பயணத்தில் முன்னணி நடிகர்களாக இளம் நாயகர்களுக்கு  சவால் விட்டு உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இருநடிகர்களும் அரசியல் கருத்துகளை  கூறிவரும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்காக இணைந்து பணியாற்றும், சூழல் ஏற்பட்டால் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் ரஜினி, கமலின் அரசியல் வருகை குறித்து கூறியுள்ளதாவது :
ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் மாயம்பிம்பங்கள். கானல் நீர்போல் காணாமல் போவார்கள். இவர்கள் மூன்று பேரையும் நம்பி பின்னால் சென்றால் ஏமாந்து போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.