புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:55 IST)

போதைப்பொருள் விவகாரம்: ராகினியை அடுத்து சஞ்சனா கல்ராணி கைது!

கன்னட திரையுலகில் போதைப் பொருள் அதிகமாக புழங்குவதாகவும், இதனை அடுத்து கன்னட திரையுலக பிரபலங்கள் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ், கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து போலீசார் 3 நாள் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் இந்த இந்த வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சஞ்சனாவிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்பப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் சிபிஐ அதிகாரிகள் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை செய்தனர். சோதனைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது சிபிஐ அலுவலகத்தில் சஞ்சனா கல்ராணியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் அவரிடமிருந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரையும் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.