புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : புதன், 26 பிப்ரவரி 2020 (14:03 IST)

பல வருடங்களுக்கு பிறகு ... ரஜினியுடன் இணையும் கமல் ! ரசிகர்கள் உற்சாகம்!

பல வருடங்களுக்கு பிறகு ... ரஜினியுடன் இணையும் கமல் ! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து எழுபது,  எண்பதுகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளனர். அனைத்து படங்களும் வசூல் ரீதியாக சாதனை படைத்தவை. இவர்கள் இருவரையும் வைத்து கே. பாலசந்தர், பாரதிராஜா, போன்ற இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
 
அதன்பின், இருவரும் முன்னணி கதாநாயகர்கள் ஆன பின், இணைந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர்,. அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
 
இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்திற்கான பூஜை மார்ச் 5 ஆம் தேதி என தகவல்கள் வெளியாகிறது. அதனால் ரஜினி, கமல் ஆகிய இரு சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.