வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (13:04 IST)

நல்ல கதைக்காகக் காத்திருக்கும் அதிதி பாலன்

‘அருவி’ படத்தைப் போல நல்ல கதைக்காகக் காத்திருக்கிறாராம் அதிதி பாலன்.
கடந்த வருட இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அருவி’. எல்லோருடையபாராட்டையும் பெற்ற இந்தப் படத்தில், அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். பல முன்னணி நடிகைகள் நடிக்கத் தயங்கிய கேரக்டர் இது.
 
முதல் படம் இவ்வளவு பெரிய ரீச் ஆனாலும், அடுத்த படத்தில் நடிக்க ரொம்பவே நேரம்எடுத்துக் கொள்கிறார் அதிதி பாலன். காரணம், முதல் படமே நன்றாகநடித்திருப்பதால், அடுத்த படம் ‘அருவி’யை மிஞ்சும் கதையாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். அதனால், நல்ல கதைக்காகக் காத்திருக்கிறார் அதிதி பாலன்.