வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (12:04 IST)

ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாகிறது ‘பக்கா’

விக்ரம்பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பக்கா’, 27ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
விக்ரம்பிரபு ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பக்கா’. இந்தப் படத்தை, எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ளார். நிக்கி கல்ரானி, பிந்து மாதவி என இரண்டு  ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சூரி, சதீஷ், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், சிங்கமுத்து, சிங்கம்புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி என ஏகப்பட்ட  காமெடி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
யுகபாரதி, கபிலன் பாடல்கள் எழுத, சத்யா இசையமைத்துள்ளார். எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, டி.சிவகுமார் தயாரித்துள்ளார். இந்தப்  படம், வருகிற வெள்ளிக்கிழமை, அதாவது ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த தேதியில்தான் ரஜினியின் ‘காலா’ ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டுள்ளது.