சூர்யா சுதா கொங்கரா படத்தில் இணைந்த பிரபல நடிகை!
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது.இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த மாதம் வெளியாகி கவனம் பெற்றது.
படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர். டிசம்பர் நான்காவது வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்தது. ஆனால் இப்போது சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகை அதிதி ஷங்கர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிதி ஏற்கனவே விருமன் மற்றும் மாவீரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.