1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (09:34 IST)

மகனின் பெயரை அறிவித்தார் மகத்: என்ன பெயர் தெரியுமா?

பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகர் மகத்துக்கு ஜூன் 7ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த நிலையில் தனது மகனின் பெயரை தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் 
 
பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா என்பவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் மகத் திருமணம் செய்துகொண்டார். சிறப்பாக நடந்த இந்த திருமணத்திற்கு சிம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான பிராச்சி மிஸ்ரா ஜூன் 7-ஆம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அடுத்து மகத் மற்றும் பிராச்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது 
 
இந்த நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகனுக்கு அதியமான் ராகவேந்திரா என்ற பெயரை வைத்து உள்ளதாகவும் தனது மகனுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது நன்றி என்றும் கூறியுள்ளார். அதியமான் ராகவேந்திரா என்ற பெயர் கொண்ட அந்த குழந்தைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.