வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (11:16 IST)

மகத்-மிஸ்ரா தேசாய் தம்பதிக்கு ஆண்குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மங்காத்தா உள்பட பல திரைப் படங்களில் நடித்தவருமான மகத் கடந்த ஆண்டு பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பிராய்ச்சி மிஸ்ரா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மகத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி என்றும் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்
 
மேலும் தான் அப்பாவாக மாறியுள்ளது குறித்து மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிராச்சி மிஸ்ரா மற்றும் குழந்தை இருக்கும் புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது