அரவிந்த் சாமியைப் புகழும் நடிகை
அரவிந்த் சாமியுடன் நடித்துள்ள நிகிஷா பட்டேல், அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்.
மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்’. மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தை, சித்திக் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை, அவரே இப்போது தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் நிகிஷா பட்டேல். நடிகையாகவே நடிக்கும் இந்த கேரக்டரை, மலையாளத்தில் இஷா தல்வார் செய்திருந்தார். அரவிந்த் சாமி, அமலா பாலுடன் இவர் இணைந்து நடித்த காட்சிகள், சென்னையில் மொத்தம் 3 நாட்களுக்குப் படமாக்கப்பட்டுள்ளன.
“இதுவரை என்னுடன் நடித்த நடிகர்களிலேயே அரவிந்த் சாமி தான் மிகவும் பண்பான மனிதர். பலவிதங்களில் தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாணுடன் ஒத்துப் போகிறார்” என அரவிந்த் சாமியைப் புகழ்ந்து தள்ளுகிறார் நிகிஷா பட்டேன். இவர் ரஜினியின் ‘காலா’ படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.