1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (17:44 IST)

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

கார்த்தி நடித்த வா வாத்தியாரே படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கார்த்தி, மக்கள் மனத்தில் நீங்காத எம்ஜிஆர் ரசிகராக நடித்திருக்கிறார்.
 
கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த டீசர் ஜப்பான் திரைப்படத்தை நினைவூட்டுவதாக ரசிகர்களின் கருத்துகள் பதிவாகியுள்ளன.
 
அதுபோலவே, ஒரு ஜாலி காமெடி படத்தை எதிர்பார்க்கலாம் என கார்த்தி ரசிகர்கள் டீசரை பார்த்த பின்பு உற்சாகத்துடன் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
 
 
 
Edited by Mahendran