ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (15:42 IST)

பழம்பெரும் நடிகையின் பயோபிக்கில் நடிக்கும் தமன்னா!

இந்திய சினிமாவில் இப்போது பயோபிக் திரைப்படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசியல்தலைவர்கள் ,விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் இப்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அவ்வாறு வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தமன்னா நடிப்பில் பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் பயோபிக் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் மிஸ்ஸியம்மா, தங்கமலை ரகசியம் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.