ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (11:24 IST)

13 வயதிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளானேன்… பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் சோனம் கபூர். நடிகை சோனம் கபூர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் கடந்த 2018 ஆம் ஆண்டு சாபரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டில் பிலிம்பேர் நடிகைக்காக சிறந்த அறிமுக விருது அவருக்குக் கிடைத்தது.  அதே ஆண்டில் ரன்கபீருடன் இணைந்து ஸ்டார் ஸ்கிரீன் விருது அவருக்குக் கிடைத்தது.

இவர் தொழிலதிபரான ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாயு கபூர் அகுஜா எனப் பெயர் வைத்துள்ளனர். மேலும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு 13 வயதிருக்கும் போது தியேட்டருக்கு சென்ற போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ ஒருவர் தன்னுடைய மார்பகங்களை பிடித்து தொல்லை தந்ததாக கூறினார். நீண்ட நாட்களாக அந்த சம்பவத்தை யாரிடமும் தான் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் தானே ஏதோ தவறு செய்தது போன்ற குற்றவுணர்வில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இப்போது திடீரென வைரல் ஆகி வருகிறது.