வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Jeyakumar
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (08:24 IST)

நடிகை சோனாவின் சுயசரிதையாக உருவாகும் ‘ஸ்மோக்’!

Actress soma
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் சோனா.



பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் (Smoke) என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநர்க மாறியுள்ளார்.

இந்த படத்தில் சனா என்கிற என்னுடைய கதாபாத்திரத்தின் பல்வேறு காலகட்ட தோற்றங்களில் நடிப்பதற்காக ஒவ்வொரு வயதிலும் என்னைப் போன்ற தோற்றம் போன்ற ஐந்து சனாக்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறேன்.

இந்த கதை ஒரு உணர்ச்சிகரமான பயணமாக இருக்கும்.. இதை திரைப்படமாக எடுக்கலாமே என பலர் கேட்கின்றனர். இது நல்ல கதையாக இருந்தாலும் ராவாக இருப்பதால் சில பேருக்கு பிடிக்காது. ஆனால் ஓடிடியில் இதை சுதந்திரமாக உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய படத்திற்கு நானே சான்றிதழ் கொடுப்பது என்றால் யு/ஏ சான்றிதழ் தரும் அளவிற்கு இந்த தொடர் இருக்கும்.  நாளை பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. சென்னை மற்றும் கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்த வெப்சீரிஸில் கதாநாயகனாக முகேஷ் கண்ணா நடிக்கிறார்.

ஷார்ட்ஃபிலிக்ஸ் துணையுடன் இதை நானே தயாரிக்கிறேன். மலையாளத்திலும் எனக்கு வரவேற்பு இருப்பதால் அங்கே மொழிமாற்றம் செய்து வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. படத்தை இயக்கிக்கொண்டே நடிப்பது கடினம் போலத்தான் தெரியும். கூடுதலாக எனக்கு தயாரிப்பு சுமையும் சேர்ந்து இருக்கிறது. ஆனாலும் நீங்கள் நினைப்பது போல இது எனக்கு கடினமாக இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்று கூறினார் சோனா.