நான் ஒன்னும் குடிச்சுட்டு டான்ஸ் ஆடல! அந்த நபர் யார் தெரியுமா! கொந்தளித்த ஷாலு ஷம்மு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்ததோடு வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்க்ஷனை பெற்றது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் மிகவும் பிரபலமடைந்தது. இந்த படத்தில் சூரியின் காதலியாகவும், ஹீரோயினுக்கு துணை நடிகையாகும் நடித்திருந்த நடிகை ஷாலு சம்மு. இவர் சமீபத்தில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நடனம் ஆபாசமாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டராக்கிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், குட்டையான ஆடை அணிந்தபடி, ஆண் நண்பருடன் குடித்து விட்டு மிகவும் நெருங்கி ஆடியதாக கிளப்பிவிட்ட அந்த வீடியோ பெரும் வைரலாக பரவியது.
இந்நிலையில் தற்போது இதற்கு பதிலளித்துள்ள நடிகை ஷாலு ‘நான் ஒன்றும் அங்கு குடித்து விட்டு நடனமாடவில்லை, அங்கு இருந்தவர்கள் அனைவருமே டான்ஸர்கள்.என்னுடன் ஆடியவரும் டான்ஸர் தான், அவர் பாய் ப்ரண்ட் இல்லை’ என்று கூறியுள்ளார்.