திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (15:15 IST)

உலகெங்கும் வெளியானது ‘நிபா’ வைரஸ்

2018ல் கேரளாவில் நிபா வைரஸ் என்ற புதிய கிருமியால் பலர் பாதிக்கப்பட்டனர். 17 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் கேராளாவில் நிபா வைரஸ் தாக்கம் தொடங்கியுள்ளது. பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 2018ல் நிபா வைரஸ் தாக்குதலின் போது கேரளாவில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘வைரஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இயக்குனர் ஆஷிக் அபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் போபன், ஆசிஃப் அலி, தோவினோ தாமஸ், ரஹ்மான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 22 ஃபீமேல் கொட்டயம், கேங்ஸ்டர் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ஆஷிக் அபு.

தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த படமும் வெளிவந்திருக்கிறது.