நடிகை மீரா மிதுனுக்கு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு !
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கும் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினா. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீராமிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர் மீரா மிதுன் வாய்தவறிப் பேசிவிட்டதாகக் கூறி ஜாமீன் தாக்கல் செய்தால், ஆனால அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஜோ மைக்கேல் என்பவர் தொடந்துள்ள வழக்கில் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனுக்கும் மற்றும் அவரது நண்பருக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.