1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (11:38 IST)

மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார். அதற்காக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அவரின் பழைய ரசிகர்களுக்கு ஷாக்கிங் ஆக அமைந்துள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.