ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (11:17 IST)

திருமண வாழ்வில் இருந்து வெளியேறுகிறேன்… சமூகவலைதளத்தில் அறிவித்த மண்டேலா நடிகை!

கும்பளாங்கி நைட்ஸ், மண்டேலா மற்றும் சமீபத்தைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இவர் நடித்த டூலெட் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றது.

இவர் நடிப்பு பயிற்சியாளரான தம்பி சோழன் என்பவரை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இப்போது தான் திருமண வாழ்வில் இருந்து வெளியேறுவதாக ஷீலா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமான பதிவில் “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும் @ChozhanV" என அறிவித்துள்ளார்.