1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 மே 2024 (07:40 IST)

ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?.. கோவை சரளா சொன்ன காரணம்!

சினிமாவில் தன்னுடையப் 15 வயதில்  நடிக்க வந்தவர் கோவை சரளா. தன்னுடைய முதல் படத்திலேயே தன்னை விட மூத்த நடிகரான பாக்யராஜுக்கு அம்மாவாக நடித்தார். அவர் பேசிய கொங்கு தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

கவுண்டமணி, செந்தி, வடிவேலு மற்றும் விவேக் ஆகியோரோடு ஜோடியாக இணைந்து நடித்த கோவை சரளா, மனோரமாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தற்போது 60 வயதுக்கு மேல் ஆகும் அவர் இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை.

இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “பிறக்கும்போது தனியாகதான் வருகிறோம். இறக்கும் போதும் தனியாகதான் வருகிறோம். இடையில் எந்த உறவுகளும் எனக்குத் தேவையில்லை என நினைத்தேன். சுதந்திரமாக வாழ விரும்பி அந்த முடிவை எடுத்தேன். யாரையும் சார்ந்து வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.