வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (17:08 IST)

காஜல் அகர்வால் புகைப்படத்தைக் கலாய்த்த நெட்டிசன்கள்… பக்குவமாய் கொடுத்த பதிலடி!

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பகால புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இப்போது சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகியுள்ளார்.

இப்போது கர்ப்பமாக இருக்கும் அவர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதை பல நெட்டிச குறும்பர்கள் கேலி செய்து கலாய்த்திருந்தனர். அதற்கு இப்போது பதிலளித்துள்ள காஜல் ‘எனது வாழ்க்கையில், பணியிடத்தில்  மற்றும் உடலில் சமீபகாலமாக மாறுதலை சந்தித்துள்ளேன். உடல் கேலி, ட்ரோல் மீம்ஸ்கள் எதற்கும் உதவாது. கருணையோடு நடந்துகொள்வோம். வாழ்வதும் வாழவிடுவதும் கொஞ்சம் கஷ்டம்தான் போல’ என பக்குவமாய் பதிலடி கொடுத்துள்ளார்.