வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2020 (12:24 IST)

மாதவிடாய் காலத்தில் காதலியை எப்படி சமாளிப்பது? ரசிகரின் கேள்விக்கு நச்சுனு டிப்ஸ் சொன்ன இலியானா!

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். மேலும் , சில பிரபலங்கள் தனது ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடி டைம் பாஸ் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகை இலியானா தனது ரசிகர்களின் கேள்விக்கு லைவ் சாட்டில் பதிலத்துக்கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் மாதவிடாய் காலத்தில் காதலியை எப்படி சமாளிப்பது?  என கேட்க, அதற்கு கொஞ்சம் கூச்சப்படாமல் "அந்த நேரத்தில் அவர்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். அதிகமாக எரிச்சல் அடைவார்கள். நாம் தான் அவர்களை பொறுப்பாக பொறுமையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஏற்படும் வாக்குவாதத்தால் அவர்கள் கோபத்தின் உச்சத்திற்கே செல்வார்கள். அப்போது நீங்கள் அவர்கள் மீது சாக்லெட்டை வீசி விட்டு ஓடி விடுங்கள்" என நச்சுனு ஒரு சூப்பர் டிப்ஸ் கொடுத்தார்".