ப்பாஹ்! 96 குட்டி ஜானுவா இது? செம்ம மாடர்ன் ஆகிட்டாங்களே!
சி.பிரேம் குமார் இயக்கத்தில் , விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் உண்மை காதல் கதையை மையமாக கொண்டு வெளிவந்த 96 படம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததோடு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் அடித்தது.
இப்படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்திருந்த நடிகை கெளரி கிஷனுக்கு இப்படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை கொடுத்ததோடு ஒரே படத்தில் படுபேமஸ் ஆகிவிட்டார். 96 படத்தில் திரிஷாவின் நடிப்பு பேசப்பட்டதைவிட கெளரி கிஷன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் கெளரி கிஷன் கொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் செலிபிரிட்டி ஷோ ஸ்டாப்பேர் (Celebrity Show Stopper) ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த விழாவில் கெளரி கிஷன் ஹாட்டான உடையில் ரேம்ப் வாக் செய்யவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.