வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (12:23 IST)

வீட்டுக்குள் இருக்கும்போது விளம்பரத்தில் நடித்து சம்பாதிக்கும் நடிகைகள்?

வீட்டுக்குள் இருக்கும்போது விளம்பரத்தில் நடித்து சம்பாதிக்கும் நடிகைகள்?
ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் நடிகர்-நடிகைகள் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள் என்றாலும் ஒரு சிலர் வீட்டில் இருந்துகொண்டே விளம்பர படத்தில் நடித்து சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது 
 
குறிப்பாக நடிக -ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டல்கோனா காபி செய்வது எப்படி என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதற்காக அவர் ப்ரூ காபி தூளை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் 
 
அதேபோல் நடிகை வாணிபோஜன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதேபோன்று டல்கோனா காபி தயாரிப்பது எப்படி என்பது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது. 
 
இந்த வீடியோக்களுக்காக நடிகைகளுக்கு சம்பந்தப்பட்ட காபி நிறுவனங்கள் வெயிட்டான தொகை கொடுப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. எனவே வீட்டுக்குள் இருந்தாலும் அவர்கள் வெளியிடும் விளம்பர வீடியோக்கள் மூலம் வருமானங்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது