செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (10:10 IST)

பிரசவத்த பார்த்த குழந்த பெத்துக்க தோணாது – விவேக்கை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

நடிகர் விவேக் சமீபத்தில் சைவ உணவே சிறந்தது என்பது போல ஒரு டிவீட்டைப் பகிர அது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விவேக் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கிடா வெட்டுவதை நேரில் பார்த்தால் அதன் பிறகு அதை சாப்பிடத் தோன்றாது. எல்லாம் அவரவர் மனப்பக்குவம்; வளர்ந்த சூழல். புதிய புதிய வைரசுகளைப் பார்க்கும் போது எதிர்காலம் சைவ உணவில் சென்று முடியலாம்.’ எனக் கூறியிருந்தார். இது கடுமையான எதிர்வினைகளை இப்போது சந்தித்து வருகிறது. இதனை அடுத்து நெட்டிசன்கள் பலர் விவேக்கைக் கலாய்த்து பதிலளிக்கும் விதமாக டிவீட் செய்து வருகின்றனர்.

அவற்றில் சில:-

அடேய் லூசு பெண்கள் பிரசவிப்பதை நேரில் பார்த்தா குழந்தையே பெத்துக்க தோணாது. அப்ப நீ சும்மா தான் இருந்தியா? புள்ள பெக்கல? வந்தமா நாலு மொக்க காமெடி பண்ணுனமா னு இருக்கனும் இந்த அறிவுரை மயிரு சொல்லற வேல எங்க கிட்ட வேணாம். நாங்க மாசம் நாலு கெடா வெட்டி திங்கும் பயக.

கதிர் அறுப்பதை நேரில் பார்த்தால் சோறு சாப்பிடவே கஷ்டமாக இருக்கும். எல்லாம் அவரவர் மனப்பக்குவம். வளர்ந்த சூழல். புதிய புதிய வைரஸ்களை பார்க்கும் போது வரும் காலங்களில் உடலை பாதுகாக்க அசைவ உணவே சரியானது என்று முடிவுக்கு வருவார்கள் சின்ன உயிர் . பெரிய உயிர் .‌ஆனால் எல்லாம் உயிர் தான்.